முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளையராஜா இசையில் விடுதலை

சனிக்கிழமை, 21 மே 2022      சினிமா
Viutalai 2022-05-21

Source: provided

இயக்குனர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்து வருகிறது. விண்ணைத்தாண்டி வருவாயா, கோ, யாமிருக்க பயமே போன்ற பிளாக்பஸ்டர் படங்களைத் கொடுத்த  RS Infotainment Pvt Ltd  எல்ட்ரெட் குமார்  விடுதலை படத்தையும் தயாரித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கி வரும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும் பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், சேத்தன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவு வேல்ராஜ்.  இப்படத்தின் கலை இயக்குனர் ஜாக்கி சிறுமலையின் மேலே உள்ள மலைகளில் ஒரு பெரிய கிராமப்புற செட்டை  மிக தத்ரூபமாக அமைத்திருக்கிறார். விஜய் சேதுபதி பங்கேற்கும் அதிரடி  சண்டைக்காட்சிகளில் ஒன்று இந்த செட்டில் படமாக்கப்பட்டது. 450 படக்குழுவினர் சிறுமலை மலைப்பகுதியில் தங்கியுள்ளனர். வனப்பகுதிக்குள் தொலைதூர இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதால், ஏதேனும் அவசரநிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது என கருதிய படக்குழு,  மருத்துவருடன் கூடிய ஆம்புலன்ஸ் ஒன்றை தயார் நிலையில் வைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!