முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் கெஜ்ரிவாலுடன் சந்திரசேகரராவ் சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2022      இந்தியா
Kejriwal 2022-05-22

Source: provided

புது டெல்லி : தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். 

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று முன்தினம் டெல்லி சென்றார். அவருடன் அமைச்சர் பிரசாந்த் ரெட்டி, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் டெல்லி சென்றனர்.  அங்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை  சந்திரசேகர ராவ் சந்தித்தார்.   

இதையடுத்து, இருவரும் தெற்கு மோதிபாக் பகுதியிலுள்ள சர்வோதயா பள்ளிக்குச் சென்று ஆய்வு நடத்தினர். டெல்லியிலுள்ள பள்ளி திட்டங்களை தெலுங்கானாவுக்கும் எடுத்துச் செல்வதாக சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.

இந்த நிலையில், இருவரும் நேற்று மீண்டும் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். சந்திப்பின்போது தேசிய அரசியல், கூட்டாட்சி, இந்தியாவின் வளர்ச்சியில் மாநிலங்களின் பங்கு, மத்திய அரசின் கொள்கைகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து