முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் முதல் அதிவேக ரயில் உற்பத்தி பணியில் சென்னை ஐ.ஐ.டி.

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2022      தமிழகம்
IIT 2022-05-22

Source: provided

சென்னை : உள்நாட்டிலேயே தயாராகும் மணிக்கு 1,000 கி.மீ. வேகம் செல்லும் திறன் பெற்ற முதல் அதிவேக ரயில் உற்பத்தியில் ரயில்வே அமைச்சகத்துடன் சென்னை ஐ.ஐ.டி. கரம் கோர்த்துள்ளது.  

மக்களை ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்துக்கு விரைவாக கொண்டு செல்லும் முயற்சியாக புதிய போக்குவரத்து சகாப்தம் படைக்க இந்திய ரயில்வே திட்டமிட்டு உள்ளது. இதன்படி, ஹைப்பர்லூப் எனப்படும் தொழில்நுட்பம் சார்ந்த போக்குவரத்து ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளது. இதற்காக சென்னை ஐ.ஐ.டி.யுடன் கரம் கோர்க்கிறது. 

ஹைப்பர்லூப் என்பது குறைந்த அழுத்தம் கொண்ட சுரங்கம் வழியே, அழுத்தம் கொடுக்கப்பட்ட வாகனங்கள் அதிவேகத்தில் பயணம் செய்யும் போக்குவரத்து முறை ஆகும். காற்றின் வழியேயான இந்த பயணத்தில், வானில் விமானம் பறப்பது போல் எந்தவித தடையும் இருக்காது. இதன்படி, விமான வேகத்தில் நிலத்தில் வாகனம் ஒன்று குறைந்த அழுத்தமுடைய சுரங்கத்தின் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு செல்லும். இதற்கு மேக்-லெவ் தொழில்நுட்பம் பயன்படுகிறது.

இதனால், உராய்வு இல்லாத பயணம் சாத்தியப்படுகிறது. இந்த பயணம் அதிவிரைவாக இருப்பதுடன், சுற்றுச்சூழலுக்கும் ஏற்றது. மின்சார ரயிலை விட குறைந்த ஆற்றலையே எடுத்து கொள்ளும். விமானம் அல்லது டீசல் ரயில் போன்று புகை வெளியீடு எதுவும் இருக்காது. இந்த தொழில்நுட்பம் உதவியுடன் உருவாகும் அதிவேக ரயில், பயணிகள் போக்குவரத்து தவிர, சரக்கு போக்குவரத்துகளை கையாள்வதற்கும் பயன்படும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து