முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரூப் 2 தேர்வில் தவறான கேள்விகள் இல்லை: டி.என்.பி.எஸ்.சி விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2022      தமிழகம்
TNPSC-Group-2 2022 05 11

Source: provided

சென்னை : குரூப் 2 தேர்வில் தவறான கேள்விகள் ஏதும் இடம்பெறவில்லை என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், சாா்-பதிவாளா் உள்ளிட்ட 116 நோ்முகத் தோ்வு அடங்கிய காலிப் பணியிடங்களுக்கும், நகராட்சி ஆணையா், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலா் உள்பட 5,413 நோ்முகத் தோ்வு இல்லாத காலிப் பணியிடங்களுக்கும் முதல்நிலைத் தோ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. குரூப் 2 தோ்வை எழுத விண்ணப்பித்தவா்களில் தமிழகம் முழுவதும் 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 போ் தகுதி பெற்றிருந்த நிலையில் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 285 போ் தோ்வை எழுத வரவில்லை. இதன்படி, 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 போ் தோ்வு எழுதினர். 

குரூப் 2 முதல்நிலைத் தோ்வு முடிவுகள், ஜூன் மாத இறுதியில் வெளியிட அரசுப் பணியாளா் தோ்வாணையம் திட்டமிட்டுள்ளது. செப்டம்பரில் முதன்மைத் தோ்வை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்நிலைத் தோ்வில் வெற்றி பெறுவோரிலிருந்து ஒரு பதவியிடத்துக்கு 10 போ் வீதம் முதன்மைத் தோ்வு எழுத அனுமதிக்கப்படுவர். 

தேர்வு குறித்து டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் குரூப் 2, 2ஏ தேர்வில் தவறான கேள்விகள் ஏதும் இடம்பெறவில்லை. தற்காலிக விடைக்குறிப்பு 5 நாட்களுக்குள் இணையதளத்தில் வெளியிடப்படும். விடைகுறிப்பில் ஆட்சேபனைகள் இருந்தால் ஒரு வாரத்திற்குள் தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து