முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலையில் அடுத்த மாதம் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் : அமைச்சர் எ.வ.வேலு தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2022      தமிழகம்
Eva-Velu 2022 01 03

Source: provided

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் அடுத்த மாதம் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார். 

ஆரணி நகராட்சி அலுவலக வளாகத்தில் வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து காவிரி நீர் நாளொன்றுக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீர் ஆரணி நகர மக்களுக்கு வழங்கும் திட்டமும், நகராட்சி அலுவலகம் அருகில் மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிக் கூடம் தொடக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் முருகேஷ் தலைமை வகித்தார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எ.வ. வேலு கலந்து கொண்டு ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்பில் முப்பதுவெட்டி பாலாற்று படுகையிலிருந்து ஆரணி நகர மக்களுக்கு வேலூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து காவிரி நீர் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். பின்னர் உடற்பயிற்சிக் கூடத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- 

ஆரணி நகர மக்களுக்கு நாள் ஒன்றுக்கு 65 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட வேண்டும், 43 லட்சம் லிட்டர் குடி தண்ணீர் மட்டுமே கிடைக்கப் பெறுவதால் வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் காவிரி நீர் ஆரணி நகர மக்களுக்கு வழங்க இந்த திட்டம் வகுக்கப்பட்டது, இதனை கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் அப்போதைய முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். இந்த திட்டமானது அரக்கோணம் வரை சென்றது. அதிலிருந்து ஆரணி மக்களுக்கு வழங்க வேண்டும் என அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சிவானந்தம் என்னிடம் கோரிக்கை வைத்து வந்திருந்தார். 

மாவட்டம் முழுவதுமே காவிரி கூட்டு குடிநீர் திட்டம் வழங்க ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வந்து, இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.  இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து