முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போரை முடிவுக்கு கொண்டு வர புடினுடன் மட்டுமே பேச தயார் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டம்

செவ்வாய்க்கிழமை, 24 மே 2022      உலகம்
Jelensky 2022 03 02

Source: provided

டாவோஸ் : போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புடினுடன் மட்டுமே பேச தயாராக இருக்கிறேன் என உக்ரைன் அதிபர் கூறியுள்ளார். 

உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய கூட்டமைப்பு கடந்த பிப்ரவரி 24-ம் தேதி ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் போர் தொடுத்தது. போர் தொடங்கி நேற்றுடன் 3 மாதங்கள் நிறைவடைகின்றன. ரஷ்ய போரில் எண்ணற்ற வீரர்கள் உள்பட, பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சர்வதேச அமைப்புகள் மற்றும் நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. 

இந்நிலையில் டாவோசில் உலக பொருளாதார கூட்டமைப்பில் பார்வையாளர்கள் மத்தியில் வீடியோ இணைப்பு வழியே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசினார். அப்போது அவர் பேசும் போது கூறியதாவது, 

போரின் தொடக்கத்தில் கீவ் நகருக்கு வெளியே ரஷ்ய படைகள் ஆக்கிரமிப்பு செய்திருந்த பகுதியில் நிறைய பேர் கொல்லப்பட்டு இருந்தனர். அவர்களின் உடல்களை நாங்கள் மீட்டோம். ஒருபுறம் போர் நடந்து பலர் உயிரிழந்து கொண்டிருக்கும் சூழலில், ரஷ்யாவின் பிற அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துவது என்பது ஏற்க முடியாதது.

ரஷ்ய அதிபர் புடினை தவிர, ரஷ்ய கூட்டமைப்பு சார்பில் வரும் யாருடனும் எந்த கூட்டத்திலும் பேச நான் தயாராக இல்லை. அதிலும் போரை முடிவுக்கு கொண்டு வரும் விவகாரம் பற்றி மட்டுமே நான் பேசுவேன். வேறு எந்தவித கூட்டம் நடைபெறுவதற்கும் அடிப்படை முகாந்திரம் இல்லை என்று கூறினார். 

தொடர்ந்து ஜெலன்ஸ்கி கூறும் போது, ரஷ்ய கூட்டமைப்பின் அதிபரே அனைத்து விவகாரங்களையும் முடிவு செய்கிறார். அவர் இல்லாமல் போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி நாம் பேசினால், அதில் போரை நிறுத்தும் முடிவை எடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து