முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது

செவ்வாய்க்கிழமை, 24 மே 2022      தமிழகம்
vote-2022-02-10

Source: provided

சென்னை : தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வரும் 10-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை வாக்காளர்களாக கொண்டு மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பாளர் அல்லது அவருடைய பெயரை முன்மொழிபவர்களில் எவரேனும் ஒருவர், சட்டமன்ற பேரவை செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியும், செயலாளருமான முனைவர்  சீனிவாசனிடம்  அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கே.ரமேஷ், மற்றும் சட்டமன்ற பேரவை செயலக துணைச்செயலாளர் ஆகியோரிடம் சட்டமன்றப் பேரவைச்செயலகத்திலுள்ள அலுவலகத்தில் எந்நாளிலும், (முறையே வங்கி விடுமுறை மற்றும் பொது விடுமுறை நாட்களான வரும் 28, 29-ம் தேதிகள் நீங்கலாக) காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள்ளாக வரும் 31-ம் தேதிக்கு மேற்படாதவாறு வேட்பு மனுக்களை அளிக்கலாம்.

வேட்பு மனுக்கள், சட்டமன்றப் பேரவைச் செயலக செயலாளர் அலுவலகத்தில் ஜூன் 01-ம்  நாளன்று காலை 11 மணியளவில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.  வேட்பாளர் விலகலுக்கான அறிவிப்பை, வேட்பாளர் அல்லது அவரது பெயரை முன்மொழிபவர்களில் ஒருவர் அல்லது வேட்பாளரால் எழுத்து மூலம் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அவரது தேர்தல் முகவர், தேர்தல் நடத்தும் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் ஜூன் 03-ம் தேதி தேதி பிற்பகல் 3 மணிக்குள் அளிக்கலாம். தேர்தலில் போட்டி இருப்பின், ஜூன் 10-ம் நாளன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையில், தலைமைச் செயலகப் பிரதானக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள சட்டமன்றப் பேரவை குழுக்கள் கூடும் அறையில் வாக்குப் பதிவு நடைபெறும். இவ்வாறு அந்த அறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து