முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரங்கு அம்மை சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளது : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

சனிக்கிழமை, 28 மே 2022      உலகம்
world-health-12-5-22

குரங்கு அம்மை சமூக பரவலாக மாறக்கூடிய அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 பேருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்த குரங்கு காய்ச்சலால் ஓரினச்சேர்க்கையாளர்கள், இரு பாலின சேர்க்கையாளர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் என இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து உலக சுகாதார அமைப்பின், உலக தொற்று அபாய தயார்நிலை குழுவின் இயக்குனர் சில்வி பிரையன்ட் கூறியதாவது:- 

மக்கள் கவலைப்படும் அளவுக்கு குரங்கம்மை வேகமாக பரவும் நோயல்ல. ஆனால், மெதுவாக இது சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு விரைவான நடவடிக்கை தேவை. தடுப்பூசியும், முறையான சிகிச்சையும் இதற்கு ஒரே தீர்வு. பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து, தனிமைப்படுத்துவதே, இதன் பரவலை தடுப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கையாகும். எதிர்காலத்தில் இந்த குரங்கு காய்ச்சல் இன்னும் அதிக எண்ணிக்கையிலானவர்களை பாதிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து