முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஷமக்காரன் விமர்சனம்

சனிக்கிழமை, 28 மே 2022      சினிமா
Poison-Criticism 2022-05-28

Source: provided

ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் விஷமக்காரன் என்ற படத்தை தயாரித்து எழுதி இயக்கியிருக்கிறார் வி என்கிற விஜய் குப்புசாமி. இவருடன் அனிகா விக்ரமன் மற்றும் சைத்ரா ரெட்டி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : ஜெ. கல்யாண், இசை : கவின் ஆதித்யா,  படத்தொகுப்பு : எஸ்.மணிக்குமரன், மக்கள் தொடர்பு : கே.எஸ்.கே. செல்வா. கதை,  ஒருவரது மனதை வசியப்படுத்தும் உத்திகளை கையாளும் பயிற்சியாளர் அக்னி. இவரிடம் தன் தோழியின் மணவாழ்க்கை சிக்கலுக்கு ஆலோசனை கேட்க அனிகா விக்ரமன் வருகிறார். அக்னியும் தம்பதிகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கி சேர்த்து வைக்கிறார். இதனால் அக்னியும் அனிகாவும் அடிக்கடி சந்திக்க நேரிட இவர்களுக்குள் காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்திற்கு முன் அக்னி தனக்கு தரங்கிணி என்ற காதலி இருந்ததாகவும், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக கூறுகிறார். அதைப்பற்றி அனிகா பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அக்னியுடன் இனிதே வாழ்கிறார். இந்நிலையில், ஒருநாள் ஒட்டலில் முன்னாள் காதலி தரங்கிணியை பார்க்கிறார் அக்னி, அதன் பின் நடக்கும் சஸ்பென்ஸ் என்ன என்பதே படத்தின் மீதிக்கதை. அக்னியாக வி தன் கதாபாத்திரத்தை உணர்ந்து அறிமுகப் படத்திலேயே வாய் ஜாலத்தை கையாண்டு தமிழ், ஆங்கிலம் என்று கலந்து பேசி சந்தர்ப்பத்தை சாதகமாக மாற்றிக் கொள்ளும் யுக்தியை கையாண்டு முத்திரை பதித்துள்ளார். இவருக்கு உறுதுணையாக அனிகா விக்ரமனும் சைத்ரா ரெட்டியும் போட்டி போட்டு நடித்துள்ளனர். இந்த மூன்று பேரை சுற்றியே கதை நகர்வதால், மற்ற கதாபாத்திரங்களும் தேவைப்படாமல் போகிறது. வெளிப்புறப் படப்பிடிப்பு குறைவு என்பதால், அலுவலகம், வீடு, கடற்கரை, சாலை என்று சிறிய வட்டத்திலேயே காட்சிக்கோணங்களை தகுந்தவாறு வைத்து ஒளிப்பதிவு செய்துள்ளார் ஜெ.கல்யாண். கவின்-ஆதித்யா இருவரும் படத்திற்கு ஏற்ற வகையில் தங்கள் பங்களிப்பை கொடுத்திருப்பது சிறப்பு. இறுதிக்காட்சியில் சிறப்பான சஸ்பென்சோடு படத்தை முடித்துள்ளார் இயக்குனர் வி. மொத்தத்தில் இந்த விஷமக்காரன் ஒரு சில்மிஷக்காரன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து