முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதியின் வெண்கல சிலையின் கீழ் பொறிக்கப்பட்டுள்ள 5 வாசகங்கள்

சனிக்கிழமை, 28 மே 2022      தமிழகம்
Karunanidhi 2022-05-28

Source: provided

சென்னை : துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையின் கீழே இந்தி திணிப்பை எதிர்ப்போம் என்பன உள்ளிட்ட 5 வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

சென்னை - ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் முன்புறம் அண்ணா சாலை ஓரத்தில் 12 அடி உயர பீடத்தில், 16 அடி உயரத்தில் ரூ.1.7 கோடி மதிப்பில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்தச் சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று திறந்து வைத்தார்.

இந்தி சிலையின் கீழே 5 வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம்,  அண்ணா வழியில் அயராது உழைப்போம்,  ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்,  இந்தி திணிப்பை எதிர்ப்போம்,  மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாச்சி ஆகிய வாசகங்கள் சிலையின் கீழே பொறிக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!