முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரடு முரடான தாடி மீசையில் அருள்நிதி

திங்கட்கிழமை, 13 ஜூன் 2022      சினிமா
Arulniti 2022 06 13

Source: provided

அருள்நிதியின் அடுத்த அவதாரம்! தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான நடிப்பால் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் அருள்நிதி. இவர் தற்போது டைரி, டி பிளாக், தேஜாவு போன்ற படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். இதுதவிர டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார் அருள்நிதி. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதோடு இப்படத்தை தயாரிக்கவும் உள்ளார் அஜய் ஞானமுத்து. இந்நிலையில், அருள்நிதி நடிக்கும் மற்றொரு படம் குறித்த அறிவிப்பும் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி ராட்சசி பட இயக்குனர் கவுதம் ராஜ் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகி உள்ளார் அருள்நிதி. இப்படத்தை ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை பட ஹீரோயின் துஷாரா விஜயன் நடிக்க உள்ளார். இப்படத்துக்கு டி இமான் இசையமைக்க உள்ளார். படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ள படக்குழு இது கிராமத்து கதை என்கின்றனர். இப்படத்துக்காக அருள்நிதி கரடு முரடான தாடி மீசையுடன் இருக்கும் போட்டோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!