முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் நடைபெறவிருந்த காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதன்கிழமை, 15 ஜூன் 2022      இந்தியா
Cauvery 2022-06-15

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் நாளை நடைபெற இருந்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகம்-தமிழ்நாடு இடையே காவிரி நீர் பங்கீடு தொடர்பான பிரச்சனைக்கு மத்தியில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயன்று வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாதுவில் புதிதாக கர்நாடகம் அணை கட்டினால் தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்காது. இதனால் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்திப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் ஜூன் 17ம் தேதி (நாளை) அதன் தலைவர் எஸ்கே ஹல்தேர் தலைமையில் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டது. மேலும் கர்நாகட அரசின் கோரிக்கையை ஏற்று மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்ற தகவல் வெளியானது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்தது.இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில் கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்க அனுமதி கூடாது என கூறப்பட்டு இருந்தது. இதனை கர்நாடக அரசு கடுமையாக எதிர்த்தது. 

இதற்கிடையே மேகதாது அணை தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதம் கூடாது என தமிழக முதல்லவர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், "காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து தமிழ்நாடு அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது. இதுதொடர்பாக உரிய அறிவுரைகளை மத்திய ஜல்சக்தி அமைச்சகத்திற்கு வழங்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் டெல்லியில் நாளை நடைபெற இருந்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் திடீரென்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து