முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு: பீகாரில் பயணிகள் ரயிலுக்கு தீ வைப்பு; டெல்லி, ஹரியாணாவிலும் போராட்டம்

வியாழக்கிழமை, 16 ஜூன் 2022      இந்தியா
Bihar-train- 2022-06-16

ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் வகையில் புதிய ஆள்சேர்ப்பு முறையை அறிவித்த மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் சரான் மாவட்டம் சப்ரா எனும் பகுதியில் பயணிகள் ரயில் பெட்டிக்கு போராட்டக்காரர்களால் தீவைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போராட்டம் டெல்லி, உ.பி., ஹரியாணவிலும் பரவியுள்ளது.

ராணுவம், கடற்படை, விமானப் படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வகை செய்யும் ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இத்திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுடைய இளைஞர்களும் இளம்பெண்களும் முப்படைகளில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதேபோல், நாடு முழுவதும் ராணுவத்தில் சேர விருப்பமுள்ள இளைஞர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பீகாரில் நேற்று முதலே பலமான எதிர்ப்பு கிளம்பத் தொடங்கியுள்ளது.

தமிழகத்திலும் வேலூரில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர், திருவண்ணாமலை பகுதிகளில் இருந்து ராணுவத்தில் சேர்வோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று காலையில் வேலூரில் இளைஞர்கள் திரண்டு அக்னி பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடினர்.

நேற்று பீகாரில் மாநிலத்தில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதுமே சாலை மறியல் நடைபெற்றது. அரா, பாகல்பூர், அர்வால், பக்சார், கயா, மூங்கர், நவாடா, சஹர்சா, சிவான் மற்றும் அவுரங்காபாத் மாவட்டங்களில் போராட்டம் வலுத்துள்ளது. பீகாரின் பக்சார் மாவட்டத்தில் ரயில் நிலையத்தில் திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பாட்னா நோக்கிச் செல்ல வேண்டிய ஜன் சதாப்தி ரயில் 30 நிமிடங்கள் தாமதமாக பயணித்தது. பீகாரில் 8 மாவட்டங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது. டெல்லி, உத்தரப் பிரதேசம், ஹரியாணா மாநிலங்களிலும் போராட்டம் பரவியுள்ளது. ஹரியாணவில் பல இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

சரான் மாவட்டம் சப்ரா எனும் பகுதியில் பயணிகள் ரயில் பெட்டிக்கு போராட்டக்காரர்களால் தீவைக்கப்பட்டது. நவாடாவில் சிலர் சாலைகளில் டயர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நவாடா ரயில் நிலையத்தை சூறையாடி போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. நவாடா ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் சில இளைஞர்கள் தண்டால் எடுத்தனர். போலீஸார் அமைதியாக கலைந்து செல்லுமாறு கோரியும் அவர்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை.

குறுகிய கால சேவை செய்தால், 4 ஆண்டுகளுக்குப் பின்னர் தங்களுக்கு என்ன வேலை கிடைக்கும். புதிதாக வேலை தேட மீண்டும் ஏதாவது படிக்க நேரிடும் என்று இளைஞர்கள் கூறுகின்றனர். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளோ செலவினங்களைக் கட்டுப்படுத்த ராணுவத்தில் சிக்கனம் காட்டக் கூடாது எனக் கூறுகின்றனர். அதேபோல், குறுகிய கால சேவையில் ஈடுபடுவோர் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற மாட்டார்கள். இது ராணுவத்துக்கு ஆபத்து என்றும் கூறியுள்ளனர். குறுகிய கால சேவையில் ஈடுபட்டுத் திரும்புவோர் கேங்ஸ்டர்களாக உருவாக வாய்ப்புள்ளது என்றும் எச்சரித்துள்ளனர். பீகாரை தொடர்ந்து உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசத்திலும் போராட்டம் வலுக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து