முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரெயில்வே சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம் : போராட்டக்காரர்களுக்கு மத்திய அமைச்சர் வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2022      இந்தியா
Aswini-Vaishnav 2022-06-17

Source: provided

புதுடெல்லி : ரெயில்வே சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம் என்று அக்னிபாத் போராட்டக்காரர்களுக்கு ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி, பீகார், உத்தரப் பிரதேசம், அரியானா உள்பட பல்வேறு மாநிலங்களிலும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, பீகார், உ.பி மாநிலங்களில் ரெயில்களில் தீ வைத்து எரித்ததால் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.

பீகார் மாநிலம் தன்பூர் ரயில் நிலையத்தில் 1500க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அங்கிருந்து பொருட்களை சேதப்படுத்தினர். ரெயில்களுக்கு தீ வைப்பு சம்பங்களும் அரங்கேறின. 

இது தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை சிசிடிவி கேமிரா பதிவின் மூலம் அடையாளம் காணப்பட்டு வருவதாக பாட்னா மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த போராட்டம் காரணமாக இதனால், சுமார் 35 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 13 குறுகிய கால இடைவெளியில் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் இதுவரை 200க்கும் மேற்பட்ட ரெயில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் அக்னிபாத் போராட்டத்தில் ஈடுபடுவோர் வன்முறையை தவிர்க்குமாறும், ரெயில்வே சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம் என்றும் ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து