முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்ய எதிர்க்கட்சிகள் வரும் 21-ம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்த முடிவு

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2022      இந்தியா
Sarathpawer 2022-06-17

Source: provided

புதுடெல்லி : ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஜூன் 21-ம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். 

இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017-ம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால்,அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக, எதிர்க்கட்சிகளுடன் டெல்லியில் கடந்த 3 நாட்களுக்கு முன் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆலோசனை மேற்கொண்டார். 

அப்போது,எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத்பவாரை அனைவரும் முன்மொழிந்த நிலையில்,உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தன்னால் நிற்க முடியாது என்று சரத்பவார் கமறுத்த நிலையில், மறுபரிசீலனை செய்யுமாறு எதிர்க்கட்சிகள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஜூன் 21-ம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். இதில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து