முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிதாக 12,847 பேருக்கு கொரோனா தொற்று: இந்தியாவில் தினசரி பாதிப்பு 13 ஆயிரத்தை நெருங்கியது

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2022      இந்தியா
India-Corona 2022 01 28

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 12,847 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் ஒரே நாளில் 14 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று நாள்தோறும் உயர்ந்து வருகிறது. அந்தவகையில் மூன்று நாட்களுக்கு முன் 8,822-ஆகவும், நேற்று முன்தினம் 12,213 ஆக இருந்த கொரோனா பாதிப்பு நேற்று 12,847 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,32,57,730 லிருந்து 4,32,70,577 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 7,985 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,74,712 லிருந்து 4,26,82,697 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்தனர். இதுவரை 5,24,817 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 58,215 லிருந்து 63,063 ஆனது.

இந்தியாவில் இதுவரை 195.84 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 15,27, 365 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து