முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூச்சுக் குழாயில் பூஞ்சை தொற்று பாதிப்பு: சோனியா காந்தி உடல்நிலை குறித்து காங்கிரஸ் விளக்கம்

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2022      இந்தியா
Sonia 2022 06 17

Source: provided

புது டெல்லி : காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மூச்சுக் குழாயில் பூஞ்சைத்தொற்று பாதித்து, கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள் என்று காங்கிரஸ் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது, அண்மையில் கொரோனா பாதித்து வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த சோனியா காந்தியின் மூக்கிலிருந்து திடீரென ரத்தம் வந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இதையடுத்து அவருக்கு உடனடியாக சிகிச்சைகள் தொடங்கப்பட்டன. அது தொடர்பான சில மருத்துவ நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டன. 

மருத்துவப் பரிசோதனையில், சோனியா காந்தியின் மூச்சுக் குழாயில், பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, சோனியா காந்திக்கு கரோனாவுக்கு பிந்தைய உடல்நலப் பாதிப்புகளுடன் இந்த பாதிப்புக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் வரும் 23-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவா் சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை புதிய அழைப்பாணையை அனுப்பியிருக்கிறது. கொரோனா தொற்றிலிருந்து குணமடையாததால் விசாரணைக்கு ஆஜராவதற்கு கூடுதல் அவகாசம் வழங்கவேண்டும் என்று அவா் கோரிக்கை விடுத்ததன் பேரில், இந்த புதிய அழைப்பாணையை அமலாக்கத்துறை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து