முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நாளில் 15 பேர் உயிரிழப்பு: இந்தியாவில் 12,899 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2022      இந்தியா
India-Vaccine 2022 02 22

Source: provided

புதுடெல்லி : நாடுமுழுவதும் 12,899 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு தற்போது 72,474 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன் 12 ஆயிரத்து 847 பேருக்கு தொற்று ஏற்பட்டது. நேற்று முனதினம் 13 ஆயிரத்து 216 பேருக்கு தொற்று ஏற்பட்டது. கடந்த 113 நாளில் தினசரி பாதிப்பு 13 ஆயிரத்தை கடந்தது. இந்நிலையில் நேற்று புதிதாக 12,899 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது., இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று முன்தினம் ஒரே நாளில் 4,46,387 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 85,78,41,663 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12 ஆயிரத்து 899 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,32, 96,692 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 72,474 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 8,518 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,26,99,363 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,24,855 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 1,96,14,88,807 பேருக்கு கொரோனா தடுப்பசி செலுத்திக் கொண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,24,591 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து