முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்னிபாத் திட்டம் குறித்து முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2022      இந்தியா
Rajnath 2022 02 22

Source: provided

புதுடெல்லி : நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படைகளின் தலைமைத் தளபதிகளுடன் நேற்று மீண்டும் ஆலோசனை நடத்தினார்.

முப்படைகளில் தற்காலிகமாகப் பணியாற்ற வாய்ப்பளிக்கும் அக்னிபாத் திட்டத்தை மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் இளைஞர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். பல இடங்களில் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களுக்குத் தீ வைக்கப்பட்டன. இந்தத் திட்டத்தின்கீழ் சேர்க்கப்படும் வீரர்களில் 25 சதவிகிதம் பேர் மட்டுமே 4 ஆண்டுகளுக்குப் பிறகு பணியில் தொடர்வார்கள், மற்றவர்களுக்கு கட்டாய ஓய்வளிக்கப்படும்.

மேலும், அவர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியப் பலன்கள் எதுவும் கிடைக்காது. இதனால், தங்களது எதிர்காலம் குறித்து கேள்வியெழுப்பும் இளைஞர்கள் வீதியில் இறங்கியுள்ளனர். இளைஞர்களின் போராட்டத்தைத் தணிக்க, ஆளும் தரப்பு எடுத்த முயற்சிகள் எதுவும் பெரிதும் பலனளிக்கவில்லை. 

அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அக்னி வீரர்களுக்கு மத்திய பாதுகாப்பு, உள்துறை அமைச்சகங்களில் 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை, பாதுகாப்பு அமைச்சகங்கள் அறிவித்துள்ளன. வரும் காலங்களில் பல்வேறு அரசாங்கங்கள் மற்றும் அமைச்சகங்களிடமிருந்து வேலைவாய்ப்பில் அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற அறிவிப்பைக் கேட்க்கலாம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஆனால், போராட்டங்கள் குறைந்தபாடில்லை.

இந்த நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது இல்லத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதிகளுடன் நேற்று மீண்டும் ஆலோசனை நடத்தினார். இரண்டு நாள்களில் நடைபெறும் இரண்டாவது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து