முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சு அருணாச்சலத்தின் 80 வது ஆண்டு விழா

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2022      சினிமா
Panchu-Arunachalam 2022 06

Source: provided

எழுத்தளார், இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக திறமை கொண்ட ஆளுமை பஞ்சு அருணாச்சலம் அவர்களின் 80 ஆண்டு விழா, இயக்குநர் இமயம் பாரதிராஜா, இசைஞானி இளையராஜா தலைமையில், தமிழ் திரையுலகின் எண்ணற்ற  பிரபலங்கள் கலந்து கொள்ள, வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவினை PA Art Productions மற்றும் Black Sheep  இணைந்து ஆகஸ்ட் மாதம் நடத்தவுள்ளனர். இவ்விழாவிற்கு பத்திரிக்கையாளர்களை அழைக்கும் நிகழ்வில்.. திரைப்பிரபலங்கள் பாரதிராஜா, கலைப்புலி தாணு, கங்கை அமரன், சித்ரா லட்சுமணன், ஆர் கே செல்வமணி,  அன்பு செழியன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கங்கை அமரன், பஞ்சு அருணாச்சலம் இல்லையென்றால் எங்கள் பரம்பரையே இல்லை. அவர் போட்ட பிள்ளையார் சுழி தான் எங்கள் வாழ்வை ஆரம்பித்து வைத்தது. அவர் இருக்கும்போதே அவருக்கு விழா எடுக்க வேண்டும் என நினைத்தோம். இப்போது நடப்பது மகிழ்ச்சி. இளையராஜா அண்ணனை தூக்கி விட்டது பஞ்சு அண்ணன் தான். அதே போல் என்னை வளர்த்து விட்டவர் பாரதிராஜா அவருக்கும் நன்றி. இந்த விழா நடக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என உறுதி கூறுகிறேன் நன்றி என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!