முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்முச்சி2 விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2022      சினிமா
Ammuchi-2-Review 2022 06 19

Source: provided

நக்கலைட்ஸ் தயாரிப்பில் கே ராஜேஸ்வர் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் அம்முச்சி 2 .  கதை,  கதாநாயகிக்கு அவரது சொந்த கிராமத்திலிருந்து வெளியூர் போய் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் இதில் அவளது அப்பாவுக்கு விருப்பம் இல்லை. குடிகார ஆசாமியான அவர் சொல்லும் மாப்பிள்ளையைத்தான் கதாநாயகி திருமணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறார். இப்படி பட்ட சூழலில் மாட்டிக்கொண்ட கதாநாயகியை காப்பாற்ற அவளது கிராமத்துக்கு வருகிறார் நாயகன். அங்கு வந்த பின் கதாநாயகியின் தந்தையை எப்படி சமாளித்தார்? கதாநாயகியின் ஆசையை நிறைவேற்றுகிறாரா என்பதுதான் மீதி கதை. படத்தின் மிகப் பெரிய பலம் கொங்குத் தமிழ் பேச்சு வழக்கு, அந்த புதிய முகங்கள் , அவர்களின் வாழ்வியல், உறவுப் பிணைப்புகளை அச்சு அசலாகக் கொண்டு வந்திருப்பது. நாயகிக்கும் அவரது அம்மாவுக்குமான சண்டையும் பாசமுமான காட்சிகளும் அழகு. காமெடி, நட்பு, துரோகம், செண்டிமெண்ட் காட்சிகள் இதம். வசனம் ரகளை. மொத்தத்தில் இந்த அம்முச்சி2 ஒரு அழகான கிராமத்துப் படம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!