முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல் காந்தியிடம் 4 - வது நாளாக அமலாக்கத்துறையினர் விசாரணை

திங்கட்கிழமை, 20 ஜூன் 2022      இந்தியா
Rahul-Gandhi- 2022 06 13

Source: provided

புதுடெல்லி : நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அமலாக்கத்துறை முன்பாக 4-வது நாளாக நேற்று ஆஜராகினார்.

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, ஏற்கெனவே ஜூன் 13 முதல் 15 வரை மூன்று நாள்கள் ஆஜராகினார். 

இதையடுத்து அடுத்தகட்ட விசாரணைக்காக வெள்ளிக்கிழமை (ஜூன் 17) ஆஜராக வேண்டுமென அமலாக்கத் துறையினர் அறிவுறுத்தினர். ஆனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு டெல்லியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தியின் உடல்நிலையை கண்காணிக்க வேண்டியிருப்பதால், தனக்கு அவகாசம் அளிக்க வேண்டுமென ராகுல் காந்தி வேண்டுகோள் விடுதத்தன் அடிப்படையில் அவர் நேற்று (திங்கள்கிழமை) ஆஜராகக் கூறினர். 

ஏற்கெனவே  3 நாள்களில் 30 மணி நேரத்துக்கும் மேலாக அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் நேற்று 4-வது நாளாக ராகுல் காந்தி ஆஜராகினார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து