முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூபாய் நோட்டு நாணயங்களில் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக புதிய அம்சங்கள்: பிரதமர் மோடி

திங்கட்கிழமை, 20 ஜூன் 2022      இந்தியா
Modi 2021 11 30

Source: provided

மைசூரு : ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களில் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

கர்நாடகாவின் மைசூரு நகரில் உள்ள நாகனஹள்ளி ரெயில் நிலையத்தில் அனைத்து இந்திய வாய் பேச முடியாத மற்றும் காது கேளாதோருக்கான பயிற்சி மையத்திற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நேற்று நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கர்நாடக கவர்னர் தாவர் சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மந்திரி பிரகலாத் ஜோஷி மற்றும் பிரதாப் சிம்ஹா எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி பேசியதாவது., மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களை சார்ந்து இருக்கும் நடைமுறையை குறைப்பதற்கான முயற்சிகளை நமது அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. நம்முடைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களில், மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. அவர்களது கல்வி சார்ந்த பாடத்திட்டங்களின் தரமும் மேம்படுத்தப்பட்டு உள்ளன.

கர்நாடகாவில் கடந்த 8 ஆண்டுகளில் 5 ஆயிரம் கி.மீ. அளவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கு ரூ.70 ஆயிரம் கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. பெங்களூருவில் ரூ.7 ஆயிரம் கோடிக்கு கூடுதலான மதிப்பில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து