முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாழ்க்கையின் ஒரு பகுதியாக நாம் யோகாவை கடைபிடிக்க வேண்டும் : மத்திய அமைச்சர் எல்.முருகன் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2022      இந்தியா
Murugan 2022-06-21

Source: provided

புதுச்சேரி : யோகாவை நாம் அனைவரும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். 

சர்வதேச யோகா தினத்தையொட்டி, புதுச்சேரி காந்தி திடலில் நடைபெற்ற பெருந்திரள் யோகா பயிற்சியை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது, 

வாழ்க்கை முறை மாற்றத்தால் இப்போது அதிகரித்து வரும் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களை யோகா மூலம் கட்டுப்படுத்த முடியும். யோகா உடற்பயிற்சியாகவும் மருந்தாகவும் மன அமைதி தருவதாகவும் உள்ளது. இத்தகைய பலன்கள் பலவற்றைத் தருகின்ற யோகாவை நாம் அனைவரும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக கடைபிடிக்க வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடியின் மிகப் பெரும் முயற்சிகளின் காரணமாக ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்ததையும் நமது நாட்டில் தோன்றிய அற்புதக் கலையை உலகமே கொண்டாடுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், தெலுங்கானா மாநில கவர்னருமான தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து