முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருநங்கையாக மாறினார் எலான் மஸ்கின் மகன்

செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2022      உலகம்
Elon-Musk 2022-06-21

Source: provided

வாஷிங்டன் : எலான் மஸ்கின் மகன்களில் ஒருவரான சேவியர் அலெக்ஸாண்டர் மஸ்க்  திருநங்கையாக தன் அடையாளத்தை பதிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக செல்வந்தர்கள் பட்டியலில் முன்னணியில் இருக்கும் எலான் மஸ்க்கிற்கு 7 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் ஒருவரான சேவியர் அலெக்ஸாண்டர் மஸ்க் பிறப்பால் ஆணாக பிறந்தாலும் நாளடைவில் உடலில் ஏற்பட்ட மாற்றங்களால் பெண் தன்மையை உணர்ந்துள்ளார்.  இதன் காரணமாக, தன் பெயரை விவியன் ஜென்னா வில்சன் என மாற்றியதோடு பாலினத்தில் பெண் என்பதையும் பதிவு செய்துள்ளார்.

மேலும், பாலின மாற்றம் தொடர்பாக சமர்ப்பித்த கோப்புகளில்  இனி என் உயிரியல் தந்தையுடன்(எலான் மஸ்க்) எவ்விதத்திலும் தொடர்பில் இருக்க விரும்பவில்லை என்பதால் அவர் எனக்குத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார். 

ஆனால் எலான் மஸ்க் தரப்பிலிருந்து இதை மறுக்கும்படியாக எந்த பதிலும் வரவில்லை.  முன்னதாக, அவர் டுவிட்டரில், என் குழந்தைகளை நான் மிகவும் நேசிக்கிறேன் என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!