முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் ரவிச்சந்திரன் அஸ்வின் விரைவில் இங்கிலாந்து பயணம்

செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2022      விளையாட்டு
Aswin 2022-06-21

Source: provided

சென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் அஸ்வின், விரைவில் இங்கிலாந்துக்குச் செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெஸ்ட் போட்டி...

ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய அஸ்வின், அடுத்ததாக ஒரு டெஸ்டில் விளையாடுவதற்காக இந்திய அணியினருடன் இணைந்து இங்கிலாந்துக்குச் செல்லவிருந்தார். இந்திய வீரர்கள் அனைவரும் இங்கிலாந்துக்குச் சென்றுவிட்ட நிலையில் அஸ்வின் இன்னும் சென்னையில் தான் உள்ளார். 

விரைவில் பயணம்...

இந்நிலையில் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் அஸ்வின். இதற்காகத் தனிமைப்படுத்தப்பட்டதால் அவரால் இங்கிலாந்துக்குச் செல்ல முடியுமா என்கிற கேள்வி எழுந்தது.இந்நிலையில் தற்போது கொரோனாவிருந்து மீண்டுவிட்ட அஸ்வின் அடுத்த இரு நாள்களில் இங்கிலாந்துக்குச் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அஸ்வினுக்கான பயண ஏற்பாடுகளை பி.சி.சி.ஐ செய்து வருகிறது. 

பயிற்சி ஆட்டத்தில்...

அஸ்வினால் இங்கிலாந்துக்குச் செல்லமுடியாவிட்டால் ஜெயந்த் யாதவை அனுப்பவும் முதலில் திட்டமிட்டிருந்தது பி.சி.சி.ஐ. எனினும் கொரோனாவாலிருந்து அஸ்வின் குணமாகிவிட்டதால் அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் ஜூன் 24 அன்று தொடங்கும் 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடவுள்ளது. அந்த ஆட்டம் நடைபெறும் சமயத்தில் இந்திய அணியினருடன் அஸ்வின் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 35 வயது அஸ்வின், 86 டெஸ்டுகளில் 442 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!