முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - இலங்கை மகளிர் கிரிக்கெட் தொடரில் இப்படியும் ஒரு பிரச்சினை

செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2022      விளையாட்டு
Women s-cricket 2022-06-21

Source: provided

மும்பை : இந்தியா - இலங்கை மகளிர் கிரிக்கெட் தொடர் எந்த சேனலில் ஒளிப்பரப்பாகிறது என்ற பிரச்சினை எழுந்துள்ளது.

போட்டி ஒளிபரப்பு...

இந்திய மகளிர் அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஜூன் 23 அன்று டி20 தொடங்குகிறது. அதன்பிறகு நடைபெறும் ஒருநாள் தொடர், ஜூலை 7 அன்று முடிவடைகிறது.  இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி இரு அணிகளும் விளையாடும் டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் எந்தத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்பது யாருக்கும் தெரியாது. 

உறுதியாகவில்லை...

இதுபற்றி இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆஷ்லி டி சில்வா ஒரு பேட்டியில் கூறியதாவது: தொலைக்காட்சி ஒளிபரப்பு பற்றி எங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை. எனினும் யூடியூப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்றார். 

தகவலும் இல்லை...

இந்தியாவில் இலங்கை கிரிக்கெட் ஆட்டங்களை ஒளிபரப்பும் சோனி நிறுவனம், இந்தத் தொடரை ஒளிபரப்புவது குறித்து இதுவரை எவ்விதத் தகவலும் தெரிவிக்கவில்லை. இதனால் மகளிர் கிரிக்கெட்டுக்கு பிசிசிஐ முக்கியத்துவம் அளிக்கவில்லை எனப் பலரும் சமூகவலைத்தளங்களில் விமர்சனம் செய்துள்ளார்கள். டி20 தொடர் ஆரம்பிக்க இன்னும் இரு நாள்களே உள்ள நிலையில் பிசிசிஐ ஏதாவது முயற்சி செய்து இந்திய மகளிர் அணி விளையாடும் ஆட்டங்களைத் தொலைக்காட்சியில் காண்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என்பதே பலருடைய கோரிக்கையாக உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!