முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி தேர்தல் பா.ஜ.க. வேட்பாளராக அறிவிப்பு: வழிபாடு செய்த கோயில் வளாகத்தை கூட்டி சுத்தம் செய்த திரௌபதி முர்மு

புதன்கிழமை, 22 ஜூன் 2022      இந்தியா
Draupadi-Murmu-1 2022-06-22

Source: provided

ரெய்ரங்பூர் : தனது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் ஒடிசா மாநிலம் ரெய்ரங்பூர் பகுதியில் உள்ள ஜெகந்நாதர், ஹனுமன், சிவன் கோயில்களுக்கு வழிபாடு செய்ய சென்ற ஜனாதிபதி தேர்தல் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு, கோயில் வளாகத்தை கூட்டி சுத்தம் செய்தார்.

ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் கவர்னர் திரௌபதி முர்மு (64) போட்டியிடுவார் என்று அக்கட்சி செவ்வாய்க்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தது. 

இந்த நிலையில், டெல்லி புறப்படுவதற்கு முன்பு, தான் முதன்முதலாக 2000ஆவது ஆண்டில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்ற ரெய்ரங்பூர் பகுதியில் உள்ள பல்வேறு கோயில்களுக்கும் சென்று திரௌபதி முர்மு வழிபாடு நடத்தினார். புரந்தேஸ்வரி சிவன் கோயிலுக்குச் சென்ற அவர், அங்கு கோயில் வளாகத்தைக் கூட்டி சுத்தம் செய்தார். வழிபாடுகளை முடித்துக் கொண்டு அவர் புவனேஸ்வரம் வழியாக டெல்லி வந்து, சனிக்கிழமை ஜனாதிபதி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யவிருக்கிறார்.

ஜனாதிபதியாக இவர் தேர்வானால் நாட்டின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதி என்ற பெருமையைப் பெறுவார். ஜனாதிபதி வேட்பாளராக பழங்குடியினப் பெண் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் அவரது சொந்த மாநிலமான ஒடிஸாவில் மட்டுமின்றி நாடு முழுவதும் அவருக்கு ஆதரவு கிடைக்கும் என்று பாஜக கருதுகிறது.

மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறாத கட்சிகளான, ஒடிஸாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம், ஜார்க்கண்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகியவற்றின் ஆதரவும் கிடைக்கும் என்று பாஜக எதிர்பார்க்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து