முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொற்று பரவல் மீண்டும் அதிகரிப்பு: இந்தியாவில் 12,249 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

புதன்கிழமை, 22 ஜூன் 2022      இந்தியா
India-Corona 2022 01 28

Source: provided

புதுடெல்லி : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,249-க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது., புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 12,249 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,33,31,645-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 81,687 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.19 சதவீதமாக உள்ளது. 

தொற்று பாதித்தவர்களில் புதிதாக 13 பேர் இறந்துள்ளனர். இதனால் தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5,24,903 ஆக அதிகரித்துள்ளது. இறந்தோரின் விகிதம் 1.21 சதவீதமாக உள்ளது. கொரோனாவில் இருந்து 5,718 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,27,25,055-ஆக அதிகரித்துள்ளது என்று குணமடைந்தோர் விகிதம் 98.60 சதவீதமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1,96,45,99,906 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை மட்டும் 12,28,291 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  கொரோனா தடுப்பூசித் திட்டம், மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகள், தீவிர கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவல் படிப்படியாகக் குறைந்து வந்தது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!