முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு

புதன்கிழமை, 22 ஜூன் 2022      இந்தியா
School-2022-06-02

Source: provided

புதுச்சேரி : புதுவை, காரைக்காலில் கோடை விடுமுறைக்கு பின்னர் 1 முதல் 10-ம் வகுப்பு வரை மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. வகுப்பறைகள் சுத்தப்படுத்தப்பட்டு, மாணவர்களின் வருகையை எதிர்நோக்கியுள்ளன. கட்டிடங்களில் பழுதுகளும் சீரமைக்கப்பட்டுள்ளது. 

புதுவையில் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதி தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வுகள் முடியும் முன்பே 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோடை விடுமுறை விடப்பட்டது. பிளஸ்-2, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 3 தினங்களுக்கு முன் வெளியானது. 

இந்த நிலையில், புதுவை, காரைக்காலில் கோடை விடுமுறைக்கு பின்னர் 1 முதல் 10-ம் வகுப்பு வரை மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கு இன்று (வியாழக்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் கல்வித்துறை இறங்கியுள்ளது. வகுப்பறைகள் சுத்தப்படுத்தப்பட்டு, மாணவர்களின் வருகையை எதிர்நோக்கியுள்ளன. கட்டிடங்களில் பழுதுகளும் சீரமைக்கப்பட்டுள்ளது. 

ஸ்மார்ட் வகுப்பறைகளில் எலக்ட்ரானிக்ஸ் சாதனைங்கள் முறையாக செயல்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டன. பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி பள்ளிகளுக்கு நேரடியாக சென்று பணிகளை ஆய்வு செய்தார். இன்றே பாடபுத்தகம், சீருடை வழங்கவும், சிறப்பு பஸ்களை இயக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!