முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் ஜூன் 27-ல் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

புதன்கிழமை, 22 ஜூன் 2022      இந்தியா
Cong 2022-06-22

Source: provided

புதுடெல்லி : அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஜூன் 27-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. 

இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் சேர்ப்பதற்கு 'அக்னிபாத்' என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 27-ம் தேதி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!