முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க வேட்பாளராக திரெளபதி முர்மு: பிரமதர் நரேந்திர மோடிக்கு பீகார் முதல்வர் நிதீஷ்குமார் நன்றி

புதன்கிழமை, 22 ஜூன் 2022      இந்தியா
Nitish-Kumar- 2022 02 13

Source: provided

பாட்னா : பா.ஜ.க வேட்பாளராக திரெளபதி முர்மு தேர்வு செய்யப்பட்டதற்காக பிரமதர் நரேந்திர மோடிக்கு பீகார் முதல்வர் நிதீஷ்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்திய ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

பா.ஜ.க. அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக பழங்குடியின சமூகத்தை சேர்ந்த திரெளபதி முர்மு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்ஹாவை அறிவித்து உள்ளனர். 

இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு ஆதரவு அளிப்பதாக பீகார் முதல்-மந்திரி நிதீஷ்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், திரெளபதி முர்முவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் பழங்குடியின பெண். நாட்டின் உயரிய பதவிக்கு பழங்குடியின பெண் ஒருவர் பரிந்துரைக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

திரெளபதி முர்மு ஒடிசா அரசாங்கத்தில் மந்திரியாக இருந்துள்ளார். ஜார்கண்ட் மாநில கவர்னராகவும் பதவி வகித்து உள்ளார். திரெளபதி முர்மு ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார் என்று பிரதமர் தெரிவித்தார். இதற்காக பிரதமருக்கு மனமார்ந்த நன்றி. இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!