முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளங்நிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை: மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு தேதி அறிவிப்பு

வியாழக்கிழமை, 23 ஜூன் 2022      இந்தியா
Central-University-Exam-202

இளங்நிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வானது வருகின்ற ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்நிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு (இளங்நிலை படிப்பு 2022) தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இளங்நிலை பொது நுழைவுத் தேர்வு வருகின்ற ஜூலை 15, ஜூலை 16, ஜூலை 19, ஜூலை 20, ஆகஸ்ட் 4, ஆகஸ்ட் 5, ஆகஸ்ட் 6, ஆகஸ்ட் 7, ஆகஸ்ட் 8 மற்றும் ஆகஸ்ட் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

குறிப்பாக, மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வானது 554 நகரங்களில் நடத்தப்படவுள்ளது. இந்தியா முழுவதும் மற்றும் இந்தியாவிற்கு வெளியே 13 நகரங்களில் நடத்தப்படவுள்ளது. கணினி அடிப்படையில் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, ஒடியா, பெங்காலி, அஸ்ஸாமி, பஞ்சாபி, ஆங்கிலம், ஹிந்தி மற்றும் உருது உள்ளிட்ட 13 மொழிகளில் இத்தேர்வு நடைபெறும்.

இளங்நிலை படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பப் படிவம், முன்னதாக ஏப்ரல் 2 அன்று வெளியிடப்பட்டது மற்றும் காலக்கெடு மே 31 வரை நீட்டிக்கப்பட்டது. மேலும், மத்திய பல்கலைக்கழகங்களில் (இளநிலை பாடப்பிரிவுகள்) நுழைவதற்கான ஒரே தேர்வு இது என்பதால், விண்ணப்பதாரர்களின் கோரிக்கையின் பேரில் விண்ணப்பிப்பதற்கான பதிவு மீண்டும் ஒருமுறை கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் http://cuet.samarth.ac.in என்ற இணையதளம் மூலமாக வியாழன் மற்றும் வெள்ளி(ஜூன் 23,24) விண்ணப்பிக்கலாம் என்றும், ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள், இரு நாள்களுக்குள் விண்ணப்பப் படிவத்தில் திருத்தங்களைச் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது நுழைவுத்தேர்வை முன்னிட்டு விண்ணப்பதாரர்களுக்கு இ-அட்மிட் கார்டு என்டிஏ இணையதளம் https://cuet.samarth.ac.in/ மூலம் தற்காலிகமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்வு தொடர்பான கேள்விகளுக்கு [email protected]  என்ற ஹெல்ப்லைன் மின்னஞ்சல் ஐடிகள் மற்றும் 011-40759000 / 011-6922 7700 என்ற எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என்றும் என்டிஏ தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்தியாவில் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மட்டுமல்லாமல் பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் கட்டாயம் என்று யுஜிசி தலைவர் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி, 43 மத்திய பல்கலைக்கழகங்கள், 13 மாநில பல்கலைக்கழகங்கள், 12 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் 18 தனியார் பல்கலைக்கழகங்கள் என 86 பல்கலைக்கழகங்களுக்கு 9,50,804 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!