முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடுமையான நிதி நெருக்கடி: பாகிஸ்தானுக்கு 2.3 பில்லியன் டாலர் கடன் வழங்கியது சீனா

வியாழக்கிழமை, 23 ஜூன் 2022      உலகம்
china2022-06-23

Source: provided

லாகூர் ; கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் சீனாவிடமிருந்து 2.3 பில்லியன் டாலர் கடன் ஒப்பந்த பத்திரம் மூலம் கடன் பெற்றது.

இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் அந்நாடுகளை அரசியல் நெருக்கடியை நோக்கி கொண்டு செல்லும் நிலையில் இதன் பின்னணியில் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டமும், அதன் மூலம் கொடுக்கப்பட்ட கடன்களும் மிக முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் தற்போது மீண்டும் சீனாவிடம் 2.3 பில்லியன் டாலர் அளவுக்கு கடன் வாங்கியுள்ளது.

இது குறித்து சீன பத்திரிகை ஒன்று, சீன வங்கிகள் கூட்டமைப்பிடம் இருந்து பாகிஸ்தான் 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் வாங்கியுள்ளது. இந்த கடன் ஒப்பந்தத்தின் படி இன்னும் சில நாட்களில் அந்தப் பணம் வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நிதியமைச்சர் இஸ்மாயில் இதுகுறித்து தனது டுவிட்டரில், "சீன வங்கிகள் கூட்டமைப்பு பாகிஸ்தானுக்கு 2.3 பில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்புக்கொண்டு கடன்பத்திரம் வழங்கியுள்ளது.

இன்னும் இரண்டு நாட்களில் இந்தப் பணம் பாகிஸ்தான் வந்து சேரும். இதற்காக சீன அரசுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி தனது சமூக வலைதள பக்கத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கும், வெளியுறவு அமைச்சர் யாங் யிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மக்களின் சார்பில் நன்றியை உரித்தாக்குவதாகக் கூறியுள்ளார். இந்நிலையில் இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானும் இதுபோன்ற நிதி நெருக்கடியில் சிக்குகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து