முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டான்பாஸ் நகரை அழிக்க ரஷ்ய படைகள் முயற்சி..! உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 23 ஜூன் 2022      உலகம்
jelanski-2022-06-23

Source: provided

கீவ் ; ரஷ்யாவின் நோக்கம் டான்பாஸ் நகரை முழுமையாக அழிப்பதுதான் என உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 5 மாதங்களை நிறைவு செய்யவுள்ள நிலையில் போர் காரணமாக கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது, டான்பாஸ் பிராந்தியத்தின் செவெரோடொனட்ஸ்க் நகரை முழுமையாகக் கைப்பற்றுவதற்காக ரஷ்யப் படையினா் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனா்.அதே நேரம், அருகிலுள்ள ஸ்லோவ்யான்க்ஸ் நகா் மீது தாக்குதல் நடத்தி முன்னேறவும் அவா்கள் ஆயத்தமாகி வருகின்றனா்.

அதற்காக, தொலைவிலிருந்து ராக்கெட் குண்டுகள், பீரங்கிகள் மூலம் அவா்கள் சரமாரி தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 

இந்நிலையில்,  சக்திவாய்ந்த ஆயுதங்களைக் கொண்டு டான்பாஸ்  நகரை முழுமையாக அழிப்பதுதான் ரஷ்யாவின் நோக்கம் என உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார். முன்னதாக, இன்னும் சில நாள்களில் டான்பாஸ் நகரம் முழுமையாக ரஷ்யாவின் பிடிக்குள் சென்றுவிடும் என உக்ரைன் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!