முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகில் மிகவும் அழகான முகம் உடைய பெண்ணாக நடிகை ஆம்பர் ஹெர்ட்டும், ஆணாக ராபர்ட் பாட்டின்சனும் தேர்வு..!

வியாழக்கிழமை, 23 ஜூன் 2022      உலகம்
amber2022-06-23

Source: provided

வாஷிங்டன் ; உலகில் மிகவும் அழகான முகம் உடைய பெண்ணாக நடிகை ஆம்பர் ஹெர்ட்டும், ஆணாக நடிகர் ராபர்ட் பாட்டின்சனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பிரபல ஹாலிவுட் நடிகை ஆம்பர் ஹெர்ட். இவர் தனது முன்னாள் கணவர் ஜானி டெப் மீது அவதூறு வழக்கு தொடர்ந்ததன் மூலம் உலகம் முழுவதும் கவனம் பெற்றார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே இவர்களின் வழக்கில் கடந்த 2-ம் தேதி தீர்ப்பு வெளியானது. அதில், ஜானி டெப் நிரபராதி எனவும், ஆம்பர் ஹேர்ட் தொடர்ந்த வழக்குகள் ஆதாரமற்றவை என கூறி கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்தது. 

இந்த நிலையில் 'பிஎச்ஐ' என்ற முக மேப்பிங் நுட்பத்தின் மூலம் உலகிலே மிக அழகான முகம் உடைய பெண் என்ற பெருமையை ஆம்பர் ஹெர்ட் பெற்றுள்ளார். 'தி பேட்மேன்' நடிகர் ராபர்ட் பாட்டின்சன் உலகின் மிக அழகான ஆண் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

லண்டனில் உள்ள மேம்பட்ட முக அழகுசாதன மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மையத்தைச் சேர்ந்தவர் டாக்டர் ஜூலியன் டி சில்வா. இவர் பிஎச்ஐ-ப் பயன்படுத்தி நடத்திய ஆய்வில் ஆம்பர் ஹெர்ட்-யின் முகம் கிரேக்க கோல்டன் ரேஷியோவுடன் 91.85 சதவீதம் துல்லியமாக இருப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நுட்பத்தைப் பயன்படுத்தி டாக்டர் சில்வா 92.15 சதவீத துல்லியத்துடன் உலகின் மிக அழகான மனிதர் ராபர்ட் பாட்டின்சன் என கண்டறிந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!