முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபரின் முதன்மை அறிவியல் ஆலோசகராக ஆர்த்தி பிரபாகர் நியமனம்..!

வியாழக்கிழமை, 23 ஜூன் 2022      உலகம்
aarthi2022-06-23

Source: provided

வாஷிங்டன் ; அமெரிக்க அதிபரின் முதன்மை அறிவியல் ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஆர்த்தி பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளதாவது., ஆர்த்தி பிரபாகர் திறமையான மற்றும் மதிப்புமிக்க பொறியாளர் மற்றும் பயன்பாட்டு இயற்பியலாளர் ஆவார். கடினமான சவால்களைத் தீர்க்கவும், சாத்தியமற்றதை சாத்தியமாக்கவும் அறிவியல் தொழில்நுட்ப கொள்கையை அவர் முன்னின்று வழிநடத்துவார் என பைடன் தெரிவித்துள்ளார்.

பிரபாகர் நியமனத்துக்கு செனட் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை அலுவலகத்தின் தலைமை பொறுப்பை (ஓஎஸ்டிபி) ஏற்கும், புலம்பெயர்ந்து வந்த முதல் பெண் என்ற பெருமையை ஆர்த்தி பிரபாகர் பெறுவார்.

மேலும், பைடன் நிர்வாகத்தில் ஒரு முக்கிய பதவியில் இந்திய-அமெரிக்க சமூகத்தைச் சேர்ந்த மிகவும் தகுதிவாய்ந்த தொழில்முறை நிபுணராகவும் அவர் இருப்பார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து