முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்லைன் கேம், கேசினோவுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி?: நிர்மலா சீதாராமன் தலைமையிலான இன்றைய ஜி.எஸ்.டி கூட்டத்தில் முடிவு

திங்கட்கிழமை, 27 ஜூன் 2022      இந்தியா
Nirmala-Sitharaman 2022 06-

Source: provided

புதுடெல்லி : ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் கேசினோ உள்ளிட்டவைகளுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான இன்று நடைபெறும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

ஜி.எஸ்.டி கவுன்சிலில் 47-வது கூட்டம், சண்டீகரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள். இதில் குதிரை பந்தையம், ஆன்லைன் விளையாட்டுகள், கேசினோ சூதாட்டங்கள் ஆகியவற்றிற்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி விதிக்க அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.

தற்போது கசினோ, குதிரை ரேசிங், ஆன்லைன் விளையாட்டுகள் ஆகியவற்றுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல செயற்கைக் கை, கால் போன்றவற்றுக்கும் சேதமடைந்த கை, கால்களைச் சுற்றித் தாங்கிப் பிடிக்கும் உபகரணங்களுக்கும் 12 சதவீத ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது.

செயற்கை கை, கால், சுத்திகரிக்கப்படும் நீர் உள்ளிட்டவைகளுக்கு ஜி.எஸ்.டியை குறைக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆகவே இவை குறித்து ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

இதற்கிடையே ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டதால், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீடு வழங்கும் மத்திய அரசின் அவகாசம் இந்த மாதத்துடன் முடிவடையும் நிலையில் இழப்பீடு வழங்குவதை தொடர வேண்டும் என மாநிலங்கள் வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து