முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்ரா குடியிருப்பு நில மோசடி புகாரில் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் ஆஜராக அமலாக்‍கத்துறை சம்மன்

திங்கட்கிழமை, 27 ஜூன் 2022      இந்தியா
Sanjay-Rawat 2022 06-27

Source: provided

மும்பை : மஹாராஷ்ராவில் மகா அரசியல் குழப்பம் நிலவி வரும் சூழலில், சிவசேனா செய்தி தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத்துக்‍கு அமலாக்‍கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நில மோசடி புகாரில் விசாரணைக்‍கு இன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. 

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்‍களை சஞ்சய்ராவத் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். சிவசேனாவுக்கு எதிராக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தாங்கள் செய்வது என்னவென்று தெரியாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

அசாமில் முகாமிட்டுள்ள சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அனைவரும் இறந்துவிட்டதாகவும், அவர்கள் மும்பை திரும்பும் போது, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சட்டமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்படுமென்றும் கடுமையாக சாடியுள்ளார். மேலும் அவர்கள் வாழும் பிணம் என்றும் சஞ்சய் ராவ்த் விமர்சித்துள்ளார். 

இந்த நிலையில், சஞ்சய்ராவத்துக்‍கு, அமலாக்‍கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. பத்ரா குடியிருப்பு நில மோசடி புகார் தொடர்பாக இன்று விசாரணைக்‍கு நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கத்துறை சம்மன் குறித்து சஞ்சய் ராவத் தெரிவிக்கையில்., “அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை அறிந்தேன். நான் மண்டியிட மாட்டேன். அதிருப்தி எம்எல்ஏக்கள் என்ன செய்தாலும் நான் குவகாத்தி செல்லமாட்டேன்.

நான் எனது கட்சியுடன் தான் இருப்பேன். நான் இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக மாட்டேன். அமாலாக்கத்துறையில் ஆஜராக காலவகாசம் கோருவேன். ஆனால், நிச்சயமாக விசாரணையை எதிர்கொள்வேன்” எனத் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து