முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி தேர்தலில் ஆதரவுகோரி முதல்வர் ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் யஷ்வந்த் சின்கா

புதன்கிழமை, 29 ஜூன் 2022      இந்தியா
Yashwant-Sinha 2022 05 25

Source: provided

திருவனந்தபுரம் :  ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்கா வாக்கு சேகரிப்பதற்காக திருவனந்தபுரம் வந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து வாக்கு சேகரிக்கிறார். 

ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெறுகிறது. பாஜக கூட்டணி வேட்பாளராக திரெளபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். 2 வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டனர். வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாகும்.

இந்த நிலையில் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா நேற்று முதல் தென் மாநிலங்களில் வாக்கு சேகரிப்பை தொடங்கினார். இதற்காக நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். விமானநிலையத்தில் அவரை கேரள சட்டம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ராஜீவ் வரவேற்றார். 

நேற்று அவர் முதல்வர் பினராய் விஜயன், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இன்று யஷ்வந்த் சின்கா சென்னை வருகிறார். அவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்களை சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி கோருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து