முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது: உதய்பூர் படுகொலைக்கு மம்தா பானர்ஜி கண்டனம்

புதன்கிழமை, 29 ஜூன் 2022      இந்தியா
Maumta-Banerjee 2022 01 23

Source: provided

கொல்கத்தா : ராஜஸ்தானின் உதய்பூரில் தையல்காரர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், வன்முறையும் தீவிரவாதமும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. உதம்பூரில் நடந்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம். சட்டம் தனது கடமையை செய்யும், மக்கள் அனைவரும் அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த தையல்காரர் கன்னையா லால், முகம்மது நபிகள் குறித்து அவதூறாகப் பேசிய பாஜக நிர்வாகி நூபுர் சர்மாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.  இதையடுத்து, கன்னையா லால் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார்.

மேலும் இந்த கொலையை விடியோவாகப் பதிவிட்டு, இஸ்லாத்தை அவமதித்த காரணத்தால் கன்னையா லாலை பழிதீர்த்தாக குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து