முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் கெடு: மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு : உத்தவ் தாக்ரே தலைமையிலான கூட்டணி ஆட்சி தப்புமா?

புதன்கிழமை, 29 ஜூன் 2022      இந்தியா
Uttav-Thackeray 2022-06-21

Source: provided

மும்பை : மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இன்று சிறப்பு கூட்டத்திற்கு அம்மாநில கவர்னர் பகத்சிங் கோஷியாரி அழைப்பு விடுத்துள்ள நிலையில்,  இன்று மாலை 5 மணிக்குள் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

கூட்டணி ஆட்சி... 

மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்எல்ஏக்கள், அசாமில் முகாமிட்டுள்ளனர். சிவசேனாவை சேர்ந்த 39 அதிருப்தி எம்எல்ஏக்கள் உட்பட மொத்தம் 48 எம்எல்ஏக்கள், ஏக்நாத் ஷிண்டே அணியில் இருப்பதாக கூறப்படுகிறது.

பெரும்பான்மையை... 

இதனிடையே, டெல்லி சென்றிருந்த முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ், 39 சிவசேனா எம்எல்ஏ-க்கள் தற்போதைய கூட்டணி அரசுடன் இருக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளதால், அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக தெரிவித்தார். எனவே, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சருக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சிறப்பு கூட்டத்திற்கு... 

இந்நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இன்று சிறப்பு கூட்டத்திற்கு அம்மாநில கவர்னர் பகத்சிங் கோஷியாரி அழைப்பு விடுத்துள்ளார். இதில் உத்தவ் தாக்ரே தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்  என்று அவர் உத்தரவிட்டுள்ளார். இன்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. வாக்கெடுப்பு முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கவர்னர் கடிதம்...

இதுகுறித்து சட்டப்பேரவை செயலருக்கு கவர்னர் பிஎஸ் கோஷியாரி எழுதியுள்ள கடிதத்தில், அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில், சிவசேனா கட்சியின் 39 எம்எல்ஏ.,க்கள் மஹா விகாஸ் அங்கதியில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பதை தெரிந்து கொண்டுள்ளேன். இதனால், அரசாங்கம் சுமுகமாக அனைவரின் நம்பிக்கையையும் பெற்று இயங்க வேண்டுமென்றால் அதற்கு முதல்வர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அதனால் இன்று மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிடப்படுகிறது. அதேபோல், சில கடுமையான அறிக்கைகள் என் கவனத்திற்கு வந்ததால், சட்டப்பேரவையின் வெளியேயும், உள்ளேயும் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கோவா பயணம்....

இந்நிலையில் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அளித்த பேட்டியில், "நாங்கள் விரைவில் மும்பை சென்று, கவர்னர் பி.எஸ்.கோஷ்யாரியை சந்தித்துப் பேசவுள்ளோம். யாருக்கும் சந்தேகம் வேண்டாம். என்னுடன் வந்துள்ள 50 எம்எல்ஏ.க்களும், சொந்த விருப்பத்தின் பேரில் வந்து மகிழ்ச்சியாக உள்ளனர். நாங்கள் ஒரு குறிக்கோளுடன் வந்துள்ளோம். சுயநலத்துக்காக வரவில்லை. இந்துத்துவா மற்றும் பாலசாகிப் கொள்கையுடன் நாங்கள் வந்துள்ளோம்" என்று கூறியுள்ளார். இதற்கிடையில் அசாமில் உள்ள அதிருப்தி அணியினர் நேற்று கோவாவில் உள்ள தாஜ் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் இன்று மும்பைக்கு நேரடியாக அழைத்துவரப்படுவார்கள் எனத் தெரிகிறது.

சுப்ரீம் கோர்ட்டில் மனு...

இதற்கிடையில் சிவசேனா சார்பில் கவர்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 16 எம்.எல்.ஏ.,க்கள் தகுதிநீக்க விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது கவர்னர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆணை பிறப்பித்துள்ளது சட்டவிரோதமானது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று சிவசேனாவுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. ஆட்சி கவிழ்ப்பா ?  இல்லை பெரும்பான்மை நிரூபிப்பதா? என்பதே அந்த சவால். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து