முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு: உதய்பூர் கொலை தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவு

புதன்கிழமை, 29 ஜூன் 2022      இந்தியா
Udaipur 2022 06 29

Source: provided

புதுடெல்லி : ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்காரர் ஒருவரை கொடூரமான முறையில் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய இருவருக்கும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக என்ஐஏ குழு ஒன்று உதய்பூர் சென்றுள்ளது. உதய்பூரில் நேற்று முன்தினம் முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக போலீஸ் படைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானின் கராச்சி நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சன்னி முஸ்லிம்களின் அடிப்படைவாத அமைப்பான தாவத் இ இஸ்லாமி குழுவுடனும், தெஹ்ரிக் இ லப்பைக் என்ற பயங்கரவாத அமைப்புடனும் கொலையாளிகளுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை நோக்கி விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

முன்னதாக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரிலுள்ள மால்தாஸ் பகுதியில் கன்னையா லால் என்பவர் தையல் கடை நடத்தி வந்தார். அவரது கடையில் அத்துமீறி புகுந்த 2 பேர் அங்கு வேலை செய்து கொண்டிருந்த கன்னையா லாலை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பொது இடத்தில் வைத்து அவரது கழுத்தை அறுத்து கொன்றனர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிட்டனர். மேலும் பிரதமர் மோடிக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து