முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரும்பான்மையை இழந்ததால் இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைப்பு

வியாழக்கிழமை, 30 ஜூன் 2022      உலகம்
Israeli-parliament- 2022 06

ஆளும் அரசு பெரும்பான்மையை இழந்ததால் இஸ்ரேலில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

இஸ்ரேலில் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான மசோதா கடந்த 22-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அந்த நாட்டில் மூன்றே ஆண்டுகளில் 5-வது பொதுத் தோ்தலை நடத்துவதற்கான நடவடிக்கை அடுத்தக்கட்டத்துக்குச் சென்றது.  இந்நிலையில், நேற்று இஸ்ரேல் நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டது.

இதனால், தற்போதைய பிரதமா் நாப்டாலி பென்னட் தனது பதவியை ராஜினாமா செய்வார். மேலும், ஆட்சிப் பொறுப்பை கூட்டணிக் கட்சித் தலைவரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான யாயிர் லபீடிடம் அவா் ஒப்படைப்பார்.   மேலும், புதிய  நாடாளுமன்ற உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வரும் நவம்பர் 1-ம் தேதி நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!