முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு: பஞ்சாப் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

வியாழக்கிழமை, 30 ஜூன் 2022      இந்தியா
Agnipat 2022 06 30

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நடைபெற்று வரும் பஞ்சாப் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக மாநில அரசால் தீர்மானம் கொண்டுவரப்படும் என அம்மாநில முதல்வர் பகவந்த் மான் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று அக்னிபத் திட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை அவர் சட்டப்பேரவையில் முன்வைத்தார்.

பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களான அஷ்விணி சர்மா மற்றும் ஜங்கி லால் மகாஜன் தவிர மற்ற அனைவரும் ஆதரவளித்த நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேசிய பகவந்த் மான், அக்னிபத் திட்ட விவகாரத்தை பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் முன்வைக்க உள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும் இந்தத் திட்டம் நாட்டின் இளைஞர்களுக்கு எதிராக உள்ளதாக பகவந்த் மான் குறிப்பிட்டார். காங்கிரஸ் மூத்த தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான பர்தாப் சிங் பஜ்வா அக்னிபத் திட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும் வலியுறுத்தி பேசினார். அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் பஞ்சாப் அரசு இத்திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!