முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை புதுச்சேரி வருகிறார்: ரங்சாமியை சந்தித்து ஆதரவு கோருகிறார் திரெளபதி முர்மு

வியாழக்கிழமை, 30 ஜூன் 2022      இந்தியா
murmu--1--2022 06 30

Source: provided

புதுச்சேரி: தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு புதுச்சேரிக்கு நாளை (ஜூலை 2) வருகிறார். முதல்வர், எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.
ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. பாஜக- கூட்டணி கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக திரெளபதி முர்மு போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். அவரை எதிர்த்து எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த்சின்கா போட்டியிடுகிறார்.
தேர்தலில் போட்டியிடும் 2 வேட்பாளர்களும் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று எம்எல்ஏக்கள், எம்பிக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இதன்படி பாஜக வேட்பாளர் திரெளபதி முர்மு வரும் ஜூலை 2ல் புதுவைக்கு வருகிறார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் நாளை (ஜூலை 2) காலை லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு திரெளபதி முர்மு வருகிறார். அவரை பாஜகவினர் வரவேற்கின்றனர்.
தொடர்ந்து அங்கிருந்து ஹோட்டல் அக்கார்டுக்கு செல்கிறார். அங்கு பாஜக கூட்டணியிலுள்ள என்.ஆர்.காங்கிரஸ், ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். அங்கு நடைபெற உள்ள கூட்டத்திலும் ஆதரவு திரட்டி பேசுகிறார்.
இதுதொடர்பாக பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதன் கூறுகையில், "வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவரையும், கடந்த ஆட்சிக்காலத்தில் தலித் சமூகத்தை சேர்ந்தவரையும் ஜனாதிபதியாக பாஜக தேர்வு செய்தது. தற்போது எளிய குடும்பத்தில் பிறந்த அரசியல் பின்புலம் இல்லாத திரெளபதி முர்மு பாஜக ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளனர்.
ஹோட்டல் அக்கார்டில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில் திரெளபதி முர்மு கலந்துகொண்டு பேசுகிறார். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஆதரவு எம்எல்ஏக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர். திரெளபதி முர்மு வருகை புதுவைக்கு வளர்ச்சி தரக்கூடியதாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து