முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்கருக்கு நன்றி சொன்ன சூர்யாவின் போஸ்ட் நெட்டில் வைரல்

வியாழக்கிழமை, 30 ஜூன் 2022      தமிழகம்
1

Source: provided

ஆஸ்கர் கமிட்டியில் இணையச் சொல்லி முதன்முறையாக தமிழ் நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த செய்தி நெட்டில் வைரலானதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் பிரபலங்களும் நடிகர் சூர்யாவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். விக்ரம் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த நடிகர் கமல் ஹாசனும் சூர்யாவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஹிந்தி சீனியர் நடிகை கஜோல், பெண் இயக்குநர் ரீமா காக்தி (Reema Kagti.) ஆகியோருக்கும் இந்தியாவிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் கமிட்டியின் அழைப்புக்கு நன்றி தெரிவித்து சூர்யா தனது டுவிட்டரில் போஸ்ட் பதிவிட்டுள்ளார். அதில், ஆஸ்கர் கமிட்டியின் அழைப்புக்கு எனது இதயப் பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அழைப்பை பெருமையுடன் ஏற்றுக் கொள்கிறேன். எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நம் அனைவருக்கும் பெருமை சேர்க்க பாடுபடுவேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்கர் கமிட்டிக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ள சூர்யாவின் டுவிட்டும் தற்போது நெட்டில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!