முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: பிரபல வீரர் ஆன்டி முர்ரே தோல்வி

வியாழக்கிழமை, 30 ஜூன் 2022      விளையாட்டு
30-Ram-54

Source: provided

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பிரபல வீரர் ஆன்டி முர்ரே 2-வது சுற்றில் தோல்வியடைந்துள்ளார். 

2-வது சுற்றில்...

விம்பிள்டன் போட்டியில் 2013, 2016 ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றவர் ஆன்டி முர்ரே. முன்னாள் நெ. 1 வீரர். லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் ஒற்றையர் 2-வது சுற்றில் ஜான் இஸ்னரை எதிர்கொண்டார். ஆன்டி முர்ரேவின் வெற்றியை அனைவரும் எதிர்பார்த்த நிலையில் 37 வயது ஜான் இஸ்னர் அபாரமாக விளையாடி 6-4, 7-6 (4), 6-7 (3), 6-4 என்ற செட்களில் ஆன்டி முர்ரேவைத் தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

முதல்முறையாக... 

இஸ்னர், 2018-ல் அரையிறுதிக்கு முன்னேறியவர். இந்த ஆட்டத்தில் 36 ஏஸ்களின் உதவியுடன் முதல்முறையாக முர்ரேவை வீழ்த்தியுள்ளார்.  விம்பிள்டன் போட்டியில் 2005, 2021 ஆண்டுகளில் 3-வது சுற்றில் வெளியேறிய முர்ரே, இம்முறை 2-வது சுற்றுடன் வெளியேற நேர்ந்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!