முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவால் பாதிப்பு: ரோகித் சர்மா, அஸ்வின் பற்றி பயிற்சியாளர் டிராவிட் கருத்து

வியாழக்கிழமை, 30 ஜூன் 2022      விளையாட்டு
30-Ram52

Source: provided

பர்மிங்காம்: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மாவின் ரிசல்ட் நெகடிவாக வந்தால் அவர் களமிறங்க வாய்ப்புள்ளதா பயிற்சியாளர் டிராவிட் தெரிவித்துள்ளார். மேலும் அஸ்வினை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.பும்ரா தலைமையில்...

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் இன்று துவங்குகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு துவங்கும் இப்போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனிடையே, ரோகித் சர்மாவுக்கு பதில் இந்திய அணியை வேகப்பந்து வீச்சாளரும் துணை கேப்டனுமான பும்ரா வழிநடத்துவார் என்று பிசிசிஐ தகவல்கள் தெரிவித்துள்ளன.

சிறப்பான பந்துவீச்சு...

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல்டிராவிட் கூறுகையில், ``கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ரோகித் சர்மாவுக்கு நடத்தப்படும் பரிசோதனையின் முடிவை பொறுத்துதான் அவர் போட்டியில் பங்கேற்பாரா இல்லையா என்பது உறுதி செய்யப்படும். (அதாவது ரோஹித்துக்கு நெகடிவ் வந்தால் அவர் களமிறங்க வாய்ப்புள்ளதாம்). இதுபோல் அஸ்வினுக்கு சமீபத்தில் கொரோனா ஏற்பட்டது. இருப்பினும், பயிற்சி டெஸ்டின் கடைசி நாளில் இந்திய அணியில் இணைந்து சிறப்பாக பந்துவீசினார். அதன்பிறகும் பயிற்சியின்போது தொடர்ந்து சிறப்பாக பந்துவீசினார்.

தொடர் கண்காணிப்பில்...

அணியின் மருத்துவக் குழு அஸ்வின் குறித்து மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. இருப்பினும் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவரது பிட்னஸில் பிரச்சினை ஏற்பட்டால், 5 நாட்களும் தொடர்ந்து பங்கேற்க முடியாது. மருத்துவ குழு கொடுத்துள்ள அறிக்கையின்படி அஸ்வினால் 5 நாட்களும் சுறுசுறுப்பாக விளையாட முடியும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ராகுல் டிராவிட் கூறி உள்ளார். 

கபில்தேவுக்கு பிறகு... 

அஸ்வின் குறித்து டிராவிட் இரண்டு விதமாக கூறி உள்ளதால், இந்த டெஸ்டில் அவர் பங்கேற்பது இன்னமும் உறுதியாகவில்லை. இதுபோல் பும்ராவுக்கு கேப்டன் வாய்ப்பு  கிடைக்கும் பட்சத்தில் கபில்தேவுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியை  வழிநடத்தும் வேகப்பந்து வீச்சாளர் என்ற சிறப்பை அவர் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து