முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரக்கு மற்றும் சேவை வரி மிகப்பெரிய வரி சீர்திருத்தம் : பிரதமர் நரேந்திர மோடி டுவிட்

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2022      இந்தியா
modi-2021-09-04

Source: provided

புதுடெல்லி : சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) மிகப்பெரிய வரி சீர்திருத்தம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இதன் மூலம் ஒரே நாடு ஒரே வரி என்ற தொலைநோக்கு பார்வை நிறைவேறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மத்திய, மாநில அரசுகளால் விதிக்கப்பட்டு வந்த கலால் வரி, சேவை வரி, மதிப்பு கூட்டு வரி (வாட்) உள்ளிட்ட 17 மறைமுக வரிகளை ஒருங்கிணைத்து சரக்கு-சேவை வரி திட்டத்தை மத்திய அரசு 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. பிரதமர் மோடி தனது டுவிட்டரில், மிகப்பெரும் வரி சீர்திருத்தம் ஜிஎஸ்டி. ஒரே நாடு ஒரே வரி என்ற தொலைநோக்கு பார்வை நிறைவேறியுள்ளது என தெரிவித்துள்ளார்.

புதிய விதிகளின்படி, பொருள்களுக்கும் சேவைகளுக்கும் 5%, 12%, 18%, 28% என 4 விகிதங்களில் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அத்தியாவசியப் பொருள்கள் உள்ளிட்ட பலவற்றுக்கு வரி விதிப்பில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. தங்கம், வைரம் உள்ளிட்ட ஆபரணங்களுக்கு 3%, 1.5% என சிறப்பு வரிகள் விதிக்கப்படுகின்றன. இவை மட்டுமின்றி 28 சதவீத வரி விதிக்கப்படும் ஆடம்பரப் பொருள்கள் மீது கூடுதலாக செஸ் வரி விதிக்கப்படுகிறது.

ஜிஎஸ்டி காரணமாகப் பல்வேறு பொருள்களின் விலை குறைந்தது. ஜிஎஸ்டி அறிமுகத்துக்கு முன் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் மறைமுக வரி சராசரியாக 31 சதவீதம் வரை இருந்தது. ஜிஎஸ்டி அமலாக்கத்தால் வரி பெருமளவில் குறைந்தது. ஆனால், அதன் பலன்கள் மக்களுக்குக் கிடைக்காத வகையில் பல நிறுவனங்கள் பொருள்களைப் பழைய விலைக்கே விற்கும் நோக்கில், அவற்றின் மீதான அடிப்படை விலையை உயா்த்தின. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து